
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்ட முடிவுகள்
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக்கிளையின் விசேட கூட்டமொன்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு தொகுதி காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வா அவர்களின் 47வது வருட சிரார்த்த தினமன்று வழமையான மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியில் ஏற்பாடு செய்யப்படும், இரத்தான முகாம் இம்மாதம் 27 ஆம் திகதி சித்தாண்டியில் நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேதினம் உட்பட பலதரப்பட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

