தனக்கு உதவிய பெண்களை நினைவு கூர்ந்த ஜனாதிபதி

ஆண்களுக்குள்ள உரிமைகளுக்கு நிகராக பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தனக்கு மூன்று பெண்களே உதவினார்கள் என கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிர்மலா சீதாராமன், ஜெனட் டெய்லர், கிரிஸ்டினா ஜோர்ஜியேவா ஆகிய மூன்று பெண்களையும் நினைவு கூர்ந்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்