தந்தை திருடியதற்காக 9 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை

ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் தந்தை காரைத் திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றபோது, பொலிசாரால் சுடப்பட்ட குண்டு அவரது 9 வயது மகன் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

 

மோர்டெசா டெல்ஃப் ஜரேகானி என்கிற 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

மேலும் திருடப்பட்ட வாகனத்தை துப்பாக்கியால் சுட்டு அதிகாரிகள் தடுக்க முயன்றபோதே இவ்வாறு நடந்துள்ளதுடன் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு பல முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் அந்த நாட்டு பொலிஸ் அதிகாரி ருஹோல்லா பிக்டெலி தெரிவித்துள்ளார்.

சிறுவனின் தந்தை மீது ஏற்கெனெவே பல கார் திருட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதையும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.