
தந்தையின் தவறான முடிவுக்கு பலியான 6 வயது சிறுமி (Update)
திருகோணமலை கந்தளாய் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலில் பாய்ந்து தந்தையும் மகளும் விபரீத முடிவை எடுத்து தற்கொலை செய்துள்ளனர்.
இவர்களின் சடலம் கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடலை பெற்று கொள்வதற்காக உறவினர்கள் யாரும் வராத நிலையில் இவர்களுடைய பெயர் விபரம் எதுவும் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை.
