தந்தையின் தவறான முடிவுக்கு பலியான 6 வயது சிறுமி

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை கந்தளாய் பராக்கிர மாவத்தையில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த  தபால் ரயிலில்  நேற்று புதன்கிழமை இரவு பாய்ந்து தந்தையும் மகளும் விபரீத முடிவை எடுத்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது 38 வயதுடைய தந்தையும் ஆறு வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும் மகளும் ரயிலில் குதித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு அவர் வேறொரு நபருடன் உறவில் இருப்பதை அறிந்து மனவேதனை அடைந்து தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.