தந்தையால் குழந்தை பெற்ற மகன்

இங்கிலாந்தில் இளைஞர்,  தந்தையின் விந்தணுவை பயன்படுத்தி மனைவிமூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் “குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்” என்று தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இங்கிலாந்தின் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாத நிலையில், ஐவிஎஃப் சென்டரை அணுகியுள்ளார். அவர்கள் சொன்ன ஆலோசனை மூலம் குழந்தை பெறுவதற்கு அவரிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறப்படுகிறது.

அதாவது மனைவியை கர்ப்பமாக்க வேறு ஒருவரின் விந்தணுவை பெற வேண்டும் எனவும், அதற்கு பெருமளவில் பணம் வேண்டும் எனவும் அச்செண்டர் கேட்டுள்ளது.

அவரிடம் செலுத்த வேண்டிய தொகை இல்லாததால் தனது தந்தையின் விந்தணுவுடன், தனது விந்தணுவையும் கலந்து மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குழந்தையின் கருத்தரிப்பில் சந்தேகமடைந்த தெற்கு யார்க்ஷயர் பகுதியின் நகராட்சி நிர்வாகமான பார்ன்ஸ்லி மெட்ரோபாலிட்டன் போரோ கவுன்சில், ’குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’ என்று வழக்கு தொடுத்துள்ளது.

வழக்கு விசாரணையில் தனது தந்தையின் விந்தணுவை பயன்படுத்தியதை அந்த இளைஞரே ஒப்புக் கொண்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘குழந்தையின் உண்மையான தந்தை யார் என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்தவேண்டிய அவசியமில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, குழந்தையின் தந்தை யார் எனக் கேட்டு நகராட்சி நிர்வாகம்தான் மனுத் தாக்கல் செய்துள்ளது. இது நகராட்சி கவுன்சிலுக்கு தேவையில்லாத வேலை. குழந்தையின் பெற்றோர்கள் வழக்கு தொடுத்திருந்தால், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.

கவுன்சிலின் பேச்சை கேட்டு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் தந்தையின் விந்தணுவால் மகன் குழந்தை பெற்ற தகவல் இணையவாசிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்