தடை செய்யப்பட்ட போதைமாத்திரை: பெண் அதிரடியாக கைது

கொழும்பில்  89  தடை செய்யப்பட்ட போதைமாத்திரைகளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவை பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரின் யுக்திய நடவடிக்கையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்