தடியால் தாக்கி கொலை: ஒருவர் கைது

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பர, மீவனபலான பகுதியில் வசித்த 63 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் தனது வீட்டில் நபரொருவருடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் சந்தேகநபர் அவரது தலையில் தடியால் தாக்கியுள்ளார். இதன்காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய சந்தேகநபரொருவரை ஹொரணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.