
தங்க நகைகளை கடத்திய பெண் கைது
டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்க நகைகளுடன் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வணிக நோக்கத்திற்காக தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
