தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்!
இந்தியா – ராஜஸ்தானில் சுரூ மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 19 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பெண்ணின் வீடு அருகே அவரது அண்ணன் அதாவது பெரியப்பா மகன் வசித்து வருகிறார். சகோதரர் உறவு முறை என்பதால் பெண்ணின் வீட்டிற்கு அவர் அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளது.
இரண்டு ஆண்டுக்கு முன்பு 2021 டிசம்பர் மாதம் வழக்கம்போல சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதுஇ அவர் தனிமையில் இருந்ததை தெரிந்து கொண்டுஇ பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். அத்துடன் அதை கைத்தொலைபேசியில் காணொளியாகவும் எடுத்து வைத்துள்ளார்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால் காணொளி இணையத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டிய வாலிபர், அதை வைத்து பிளாக்மெயில் செய்து தொடர்ந்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகள் பயத்துடன் இளம்பெண் அண்ணின் பாலியல் கொடுமையை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த சில நாட்களாகவே பெண் மனமுடைந்து காணப்பட்ட நிலையில், பெண்ணின் தாயார் அதை உணர்ந்து விசாரித்துள்ளார். அப்போது தான் தனக்கு நேர்ந்த அவலத்தை கொட்டி தீர்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றார். தொடர்ந்து ரத்தனாகர் பொலிஸ் நிலையத்தில் பெண் புகார் அளித்தார்.
அதன் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் விரைவில் நீதி பெற்று தருவோம் என பொலிஸ் அதிகாரி சுபாஷ் பெற்றோருக்கு உறுதி அளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்