
தங்கத்தில் பானிபூரி: வைரலாகும் காணொளி
இந்தியாவில் தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரி தொடர்பில் வெளியான காணொளி ஒன்று வைரவாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பிரசித்தமான உணவுகளில் பானிபூரியும் ஒன்று. இது தெருவோர உணவுகளில் அதிகமாக விற்பனையாகும். இந்த பிரசித்தமான உணவு பல்வேறு வகைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு தெரு உணவக விற்பனையாளர் ஒருவர், பானிபூரியின் புதிய வகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இந்த பானிபூரி தொடர்பிலான காணொளி இணையத்தில் வெளியாகி பேசப்பட்டு வருகின்றது.
அதில், தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரியுடன் துருவிய பாதாம் மற்றும் தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு தட்டில் மொத்தம் 6 பானிபூரிகள் உள்ளது.
ஒவ்வொரு பானிபூரியிலும் துண்டாக்கப்பட்ட பாதாம் மற்றும் சில முழு முந்திரி மற்றும் பிஸ்தாவை சேர்த்து அதனுடன் தேனை சேர்த்து அவற்றை பரிமாறுகிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த காணொளி இணையத்தில் வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் இந்த உணவு தயாரிப்பை விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
