தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக தங்க விலையானது ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வந்த நிலையில், இன்றையதினம் மீண்டும் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 192,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,050 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்