தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் காவல்

இந்தியா – நாடு முழுவதும் தக்காளியின் வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து டெல்லிக்கு சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளியை ஏற்றி சென்று கொண்டிருந்த லொறி, தெலுங்கானா மாநிலம் அதிதிலாபாத் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதனால் லொறியில் ஏற்றப்பட்டிருந்த தக்காளி சாலையில் சிதறியது.

தக்காளி விலை தற்போது அதிகமாக இருக்கும் காரணத்தால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விபத்தில் சிக்கிய லொறியில் இருக்கும் தக்காளியை அள்ளி சென்று விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த பொலிசார் தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய பொலிசாரை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர். தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ள சம்பவத்தை அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்