அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பில், சீனாவின் அரிய கனிமங்கள் மீதான ஆதிக்கம் முக்கிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்கா தனது உள்நாட்டு அரிய கனிம உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் திறனை அதிகரித்து வந்தாலும், 2030களிலும் சீன இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு தேவையான முக்கியமான அரிய கனிமங்களில் சுமார் 42 சதவீதத்தை மட்டுமே தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் அதன் தேவையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என Benchmark Mineral Intelligence தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அரிய கனிமங்களைச் சுரங்கப்படுத்துவதிலும் சுத்திகரிப்பதிலும் சீனா உலகளவில் முன்னிலை வகிக்கிறது.
மின்சார வாகனங்கள், கணினிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்திக்கு அரிய கனிமங்கள் முக்கியமான மூலப்பொருட்களாக உள்ளன. சீனா ஏற்கனவே இவற்றின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அந்தக் கட்டுப்பாடுகளை மேலும் தாமதப்படுத்துவது தொடர்பான விவகாரமும் ட்ரம்ப் – ஷி சந்திப்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









