இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக இன்று (செப்டம்பர் 15) மேலும் சரிவடைந்துள்ளது. வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.334-ஐ கடந்துள்ளது.
Seylan Bank தரவுகளின்படி, டொலரின் கொள்வனவு விலை ரூ.324.35 இலிருந்து ரூ.325.15 ஆகவும், விற்பனை விலை ரூ.333.60 இலிருந்து ரூ.334.40 ஆகவும் அதிகரித்துள்ளது.
அதேவேளை, Bank of Ceylon இன்று காலை 11.20 மணியளவில் டொலரின் கொள்வனவு விலையை ரூ.324.75 ஆகவும், விற்பனை விலையை ரூ.333.75 ஆகவும் அறிவித்துள்ளது.
இலங்கையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை
செப்டம்பர் 15 அன்று முன்னணி வர்த்தக வங்கிகளில் பதிவான டொலர் விற்பனை விலைகள்.
| bank | selling |
|---|---|
| Seylan Bank | 334.4 |
| NDB Bank | 334 |
| People’s Bank | 334.01 |
| Commercial Bank | 333.25 |
| Sampath Bank | 334 |









