டெல்லி – குஜராத் இன்று பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று புதன் கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி டெல்லியில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த இரண்டு அணிகளும் இதுவரையில் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 2 போட்டிகளிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்