
டெல்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம்
இந்தியாவின் புதுடெல்லியில், கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 807 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பதுடன், சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
டெல்லியில் காவல்துறை தரப்பிலிருந்து வெளியாகியுள்ள புள்ளிவிபரத்தில், இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, டெல்லியில் ஜனவரி முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரையாக முதல் 15 நாட்களில் மாத்திரம் 509 பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 809 பேர் காணமல் போயுள்ளனர்.
அதில் 146 சிறுமிகளும் 45 சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 616 பேர் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், அதில் 181 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 435 பேரைத் தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த பல ஆண்டுகளாக 2.3 இலட்சம் பேர் காணாமல் போயுள்ளதால், சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
