டெனால்ட் டரம்ப்பிற்கு 83.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம்

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் எழுத்தாளரான ஈ.ஜீன் கரோல் என்பவருக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் டெனால்ட் டரம்ப்பிற்கு 83.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த எழுத்தாளரின் நற்பெயருக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக 18.3 மில்லியன் டொலரும் தண்டனைக்குரிய சேதங்களுக்காக 65 மில்லியன் டொலரும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பெண் ஒருவரை கீழே வைப்பதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய தோல்வியாகும் என எழுத்தாளரான ஈ.ஜீன் கரோல் தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்த தீர்ப்பை முற்றிலும் அசாதாரணமானது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும் நேற்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த போது தெரிவித்த கருத்துக்களுக்காக தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்