டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாணத்தில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பிலான ஆலோசனை கூட்டம் மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாகாண சபை கட்டிடத்தில் இடம் பெற்றது.

இதில் டெங்கு பரவும் வலயங்களாக காணப்படும் பிரதேசங்களில் புதிய திட்டங்களை கையாளுவதன் மூலமாக அதில் இருந்து பாதுகாத்து குறைக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆளுனர் உயரதிகாரிடத்தல் பணிப்புரை விடுத்தார்.

இதில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.