டிரான் அலஸுக்கு பாதாள உலகக் குழுவிடமிருந்து கொலை மிரட்டல்!

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

அதில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, ​​நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களை மீண்டும் அழைத்து வர உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறி, இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.