டிப்ளோமா பட்டம் பெற்ற நாய்

அமெரிக்க பல்கலைக்கழகமான நியூ ஜெர்சியில் உள்ள செட்டான் ஹால்டில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கும் அவரது வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

மாற்றுத் திறனாளியான மாணவி கிரேஸ் மரியானி உடன் அவரது வளர்ப்பு நாய் தொடர்ந்தும் வகுப்பறைக்கு தவறாமல் வந்ததை பாராட்டும் விதமாகவே பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவில் மாணவி கிரேஸ் மரியானிக்கு கல்வியில் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் வழங்கப்பட்டதுடன் மாணவியின் வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பட்டத்தை தனது வாயால் அழகாக கவ்வி பெற்றுக் கொண்ட போது பெரும் கரகோசம் எழுந்ததாக செய்திதளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்