-யாழ் நிருபர்-
யாழ். சண்டிலிப்பாய் சந்திப் பகுதியில் நேற்று இரவு டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு 11 மணியளவில் மானிப்பாயிலிருந்து சண்டிலிப்பாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய இளைஞன், சண்டிலிப்பாய் சந்தியை கடக்க முற்பட்ட வேளை, சங்கானைப் பகுதியில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.