டிப்பர் உழவு இயந்திரங்கள் பொலிசாரால் பறிமுதல்

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த டிப்பர்களுடன் உளவு இயந்திரங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கல்லாறு பகுதி மணல் அகழ்வுக்கு முற்றாக தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அப்பகுதி வன விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் காணப்படுவதன் காரணமாக அப்பகுதியில் இருந்து மணல் அகழ்வு முட்டாக தடை செய்யப்பட்டிருந்த போதிலும் சிலர் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக தருமபுர பொலிஸாருக்கு நேற்று சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இரண்டு டிப்பர்கள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது .

குறித்த சம்பவத்தின் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் தர்மபுர பொலிசார் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தடய பொருட்கள் பெப்ரவரி 11 கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்.