ஜோ பைடன் முன்பு மேலாடையை அகற்றிய திருநங்கை! வைரல் வீடியோ
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடன் முன்னிலையில் கடந்த 10 ஆம் திகதி, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒற்றுமையைக் காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரைட் மாத கொண்டாட்ட நிகழ்வில் திருநங்கை ஒருவர் மேலாடையை அகற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகி வருகிறது.
ரோஸ் மோன்டோயா என்ற திருநங்கை அதிபரை சந்தித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வெள்ளை மாளிகையில் மேலாடையை அகற்றியவாறு, வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
தற்போது டிக்டாக்கில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜோ பைடனை சந்தித்ததையும், கைகுலுக்கும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அந்த திருநங்கை பெண் கூறுவது, “திருநங்கை உரிமைகள் மனித உரிமைகள்!”என்று மொன்டோயா திருநங்கைகளுக்கு ஆதரவான செய்தியை கேமராவில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
அதுமட்டுமின்றி, ஜோ பைடனுக்கு முன்னால் மொன்டோயா மேலாடையின்றி செல்வதையும் வீடியோ காட்டுகிறது. மேலும், இதில் இவர் மேலாடையை அகற்றி காட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தொடர்ந்து, இது பல கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்