
ஜூஸ் கடையில் ஐஸ் கட்டிக்குள் உறைந்து கிடந்த எலி
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் அமைந்துள்ள உணவகங்ளுக்கு விநியோகிக்கப்பட்ட பனிக்கட்டியில் உறைந்த நிலையில் எலியின் சடலம் கண்டறிப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வாட்ஸ் ஆப் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து மக்கள் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உள்ளிட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருப்பது தான் இதற்கு காரணம் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, பொலிஸார் இது தொடர்பாக ஐஸ் கட்டிகள் விநியோகம் செய்யப்பட்ட இடங்கள், ஐஸ்கட்டி தொழிற்சாலைகளை தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

