ஜூலை முதல் நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை

அஸ்வசும நலன்புரி உதவித்தொகை முன்மொழிவுத் திட்டத்தை ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபா கொடுப்பனவை டிசம்பர் 31 ஆம் திகதி வரை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் திகதி வரை பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும், ஜூலை 1 முதல் 8 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் 8,500 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மிகவும் ஏழ்மையான 4 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை 1 முதல் 3 ஆண்டுகள் வரை 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.