ஜா-எல பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து கேரள கஞ்சா மீட்பு

கம்பஹா – ஜா-எல பொலிஸ் பிரிவின் நிவாசிபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, பாழடைந்த வீட்டிலிருந்து கேரள கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.

இதன்போது, 5 பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 129 கிலோகிராம் 245 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.