ஜப்பானில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வு

ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பானுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடம்பெயர்ந்தவர்களுக்கு ஜப்பான் ராணுவம் நிவாரணம் வழங்கி வருகின்றது.

 

இதேவேளை  தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக  அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.