திடீரென சிவப்பு நிறமாக மாறிய நதி

ஜப்பான் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காகச் சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உணவுகளில் நிறத்திற்காகச் சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும், அத்துடன் மிக பெரிய பிரச்சினை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கோரியுள்ளது”.