
நாடாளுமன்றஉறுப்பினர் ஜனா திடீர் பணக்காரர் ஆனது எப்படி என்பதை மக்கள் கேள்வி கேட்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
ஜனா அண்ணனுக்கு இங்கிருக்கும் ஆடம்பர சொத்துக்களை வாங்க எங்கிருந்து பணம் வந்தது? அவருடைய ஊரில் உள்ளவர்களுக்கு தெரியும் அவருடைய குடும்ப பின்னணி என்ன என்று, அவ்வாறு இருக்கையில் அவர் எவ்வாறு திடீர் பணக்காரன் ஆனார்.
போராட்டத்தையும், படிப்பையும் விட்டு லண்டனுக்கு ஓடிப்போனவர் லண்டனில் அவ்வளவு உழைக்க முடியுமா? என சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
