
ஜனாஸா வாகனத்திற்கு தேவையான மின்கலம் வழங்கி வைப்பு
-கல்முனை நிருபர்-
பகிரங்கமாக செய்யப்படும் நன்கொடைகள், அன்பளிப்புக்கள் பிறரையும் மற்றவருக்கு உதவ தூண்டும் என்ற அடிப்படையில் லண்டன் மாநகர என்லைட்டன் அகடமி விரிவுரையாளர் அப்துல் சமட் பதியூதீனினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மின்கலங்களை கையளிக்கும் இந்நிகழ்வில், மருதமுனை உலமா சபையின் செயலாளர் மௌலவி எஸ்.எல். றியாஸ் , மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர் பேராசிரியர் ஐ.எல்.எம். மாஹீர், மஸ்ஜிதுல் நூர் ஜும்மாப்பள்ளிவாசல் செயலாளர் ஏ.ஏ. புழைல், மஸ்ஜிதுன் நூர் ஜும்மாப்பள்ளிவாசல் கட்டிடக்குழு செயலாளர் எம்.ஐ.எம். வலீத், ஜனாஸா நலன்புரி சங்க இணைப்பாளர் சட்டத்தரணி எம்.எம். முஅஸ்ஸம் , கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மௌலவி எம்.எம்.நதிர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜனாஸா வாகனத்தின் தேவைகள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் செயற்பாடுகள், பிரதேச மார்க்க விடயங்கள் தொடர்பில் இங்கு கருத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
