ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவுக்கு இதன்போது வாழ்த்துத் தெரிவித்த ஸ்ரீதரன், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்