ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள சஜித்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே, சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்