
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று தீர்மானிக்கவில்லை: மகளிர் அணி உப தலைவி
-வெல்லாவெளி நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை கிளையின் மகளிர் அணி தெரிவு நேற்று சனிக்கிழமை பட்டிப்பளையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வினை பட்டிப்பளை பிரதேச கிளை ஏற்பாடு செய்ததுடன், நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் , அரியனேந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் பிரதேச நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணி நிருவாகம் மற்றும் தமிழரசுக்கட்சியின் பற்றாளர்கள் எனப்பலர்கலந்து கொண்டனர்.
இதில் கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி உப தலைவி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இது வரையிலும் எந்த ஒரு தீர்மானமும் தமிழரசுக்கட்சியின் உயர் மட்ட குழு எடுக்கவில்லை எனவும் , ஜனாதிபதி தேர்தலில் எவரை ஆதரிப்பது என்பதை ,எமது கட்சியின் உயர் பீடம் தீர்மானிக்கும் எனவும் கருத்து தெரிவித்தார்.
அவ்வாறு யாரை ஆதரிப்பது என்பதை கட்சியின் மத்திய குழு,அரசியல் குழு கூடி அதனை மக்களுக்கு வெகு விரைவில் அறிவிக்கும் எனவும் கருத்து தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


