
ஜனாதிபதி இல்லத்தின் மீது தாக்குதல் சம்பவம் : ஸ்ரீ ரங்காவுக்கு பிணை
2022 ஜூலை 9 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீவைக்க வழிவகுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவுக்கு நேற்று புதன்கிழமை பிணை வழங்கப்பட்டது.
20,000 மற்றும் தலா 5 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த வழக்கில் ரங்காவை சந்தேக நபராகப் பெயரிட்டுள்ளது, அவர் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதாகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தின் சாட்சிகளிடம் செல்வாக்குச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
