ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டை வந்தடைந்தார்

ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 10 ஆம் திகதி ஜேர்மனிக்கு புறப்பட்டார்.

ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங் வோல்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறித்த விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, ​​பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல்களில் ஜனாதிபதி ஈடுபட்டார்.

மேலும் இதன்போது வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில், ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் உள்ளிட்ட இரு தரப்பு ஆர்வமுள்ள பல விடயங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.