ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசேட நேர்காணலொன்றின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்