சோளத்தின் நன்மைகள் தீமைகள்

சோளத்தின் நன்மைகள் தீமைகள்

சோளத்தின் நன்மைகள் தீமைகள்

🟡🟢சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரமாகும் ஆகும். இவற்றில் சில வகைகள் தானியங்களுக்காகவும் வேறு சில வகைகள் கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இன்னும் சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. சோளம் உலகம் முழுவதும் மிதமான தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. சோளத்தை ஆங்கிலத்தில் Great millet என்று அழைப்பார்கள். இதற்கு சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்ற வேறு பெயர்களும் உண்டு.

🟡🟢சோளம் வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம், என பலவகைப்படும்.

சோளத்தின் நன்மைகள்

🌽சோளம் கார்போஹைட்ரேட் நிறைந்தது, இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

🌽சோளத்தில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது.எனவே சோளம் டயட் பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஒரு கப் வேகவைத்த சோளத்தில் 4 கிராம் நார்சத்து உள்ளது.இதனால் மலச்சிக்கல் ,இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விடுபட முடியும்

🌽சோளத்தில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

🌽சோளம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் கண் பார்வையை பாதுகாக்க உதவும்.
🌽அதிக பழங்கள் மற்றும் காய் சாப்பிடுபவர்களின் எடையை விட அதிக நார்சத்து நிறைந்த சோள உணவு சாப்பிடுபவர்களின் எடை குறைந்துள்ளதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🌽சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகளை சரிசெய்யும்.

🌽சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் திடலாத்திரமான எடையை  பெற முடியும்.

🌽இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்தோ சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த  அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு நீங்கும்.

🌽நார்ச்சத்து அதிகமிருப்பதால் இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, சுருக்கங்கள்  ஏற்படுவதை தாமதிக்கிறது.

🌽சோளத்தை உணவில் சேர்ப்பதால்இ நீரிழிவு நோய்க்கு சிறப்பாக பயனளிக்கின்றது. நார்ச்சத்தும் புரதமும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள்ள வைக்க உதவி புரிகின்றது.

🌽சோளத்தில் மாச்சத்தும் புரதச்சத்தும் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவடையச் செய்கின்றது. வெள்ளை சோளம் வயது முதிர்ச்சியால் ஏற்படுகின்ற நாட்பட்ட மூட்டு வலிக்கும் எலும்பு தேய்மானத்துக்கும் ரொம்ப நல்லது.

சோளத்தின் தீமைகள்

🌽சோளத்தை அதிகமாக சாப்பிட்டால் சருமத்தில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். மேலும் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

🌽சோளம் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது, அதனால் சர்க்கரை நோயாளிகள் சோளம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

🌽சோளத்தில் நார்சத்து அதிகமாக இருப்பதால் இதனை அதிகமாக எடுத்து கொண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தும்.

சோளத்தின் நன்மைகள் தீமைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்