சோமாவதி அமாவாசை : பித்ரு தோஷத்தைப் போக்க செய்ய வேண்டியவை

ஆடி மாத திங்கட்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்று பெயர். ஆடி முதல்நாளான இன்று திங்கட்கிழமை அமாவாசை வந்துள்ளது சிறப்பானது. சோமாவதி அமாவாசை நாளில் சிவபெருமானை வழிபட்டால் நவ கிரக தோஷங்கள் நீங்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்க உதவும். குறிப்பாக பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

பித்ரு தோஷம் நீங்க சோமாவதி அமாவாசை அன்று ஆலமரத்தை சுற்றி வழிபட வேண்டும் அல்லது புதிய மரக்கன்று நட வேண்டும். அரசமரத்தை பக்தியுடன் 7 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியகரமானதாகும். இதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

சோமாவதி அமாவாசை அன்று ஏழைக் குழந்தைகளுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானமாக வழங்க வேண்டும். அத்துடன் ஆலமரத்தடியில் தண்ணீர் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறந்த முன்னோர்கள் திருப்தி அடைகின்றனர்.

சோமாவதி அமாவாசை தினத்தன்று மௌன விரதம் கடைபிடிப்பதால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என மத்ஸ்ய புராணத்திலும் சோமாவதி அமாவாசையின் மகத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோமாவதி அமாவாசையில் விரதம் இருந்தால் நாக தோஷம் நீங்கும் என்பது உறுதி. அத்துடன் இன்று சிவனை நினைத்து தியானம் செய்தால் நன்மை பயக்கும்.

சோமாவதி அமாவாசையன்று ருத்ராபிஷேகம் செய்வதும்இ அப்படி செய்யும் அபிஷேகத்தை பார்ப்பதும் வாழ்வில் அனைத்து வளங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்