சைக்கிளுடன் மோதிய பேருந்து: ஒருவர் மரணம்

யாழ். வீதியின் பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவில்குளம் – சவரிக்குளம் பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த மற்றவர் கோவில்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்