
சேருநுவர சிவில் பாதுகாப்புப்படை ஏற்பாடு செய்த விளையாட்டுப் போட்டிகள்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -சேருநுவர பகுதியில் தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதனை சேருநுவர சிவில் பாதுகாப்புப்படை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது முட்டி உடைத்தல், தலையணைச் சமர், மரதன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
போட்டி நிகழ்ச்சிகளில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

