சேம்பையடி கண்டத்தில் விவசாயிகள் ஒன்றுகூடி அறுவடை விழா!

 

மட்டக்களப்பு கமநல பிரிவுக்குட்பட்ட சேம்பையடி கண்டத்து விவசாயிகள் சேர்ந்து பாரம்பரிய முறையில் அறுவடை விழாவை இன்று செவ்வாய்க்கிழமை நடத்தினர்

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் செய்கையில் அதிக விளைச்சல் கிடைக்க வேண்டியும் இயற்கையையும் இறைவனையும் போற்றி நன்றி செலுத்தும் ஒரு விழாவாக இந்த அறுவடை விழா நடாத்தப்படுகின்றது.

சேம்பையடி கண்டத்து விவசாய அமைப்பின் தலைவர் சி.புஸ்பாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பல விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

இவ்விழா பாரிய விழாவாக நடாத்த இருந்த போதும் வேளாண்மையில் ஏற்பட்ட அறக்கொட்டி தாக்கத்தினால் சிறு விழாவாக நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.