சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவணி

மூதூர் -சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தின் பாற்குடப்பவணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தில் கடந்த ஜீலை 16 மஹா கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள் அபிஷேகம் நடைபெற்று இறுதியாக பாற்குடப்பவணி நடைபெற்றது.

பாற்குடப் பவணியானது கட்டைபறிச்சான் -கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.

இதன் பின்னர்  1008 சங்கில் சங்காபிஷேகமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அப்பகுதிகளைச் சேர்ந்த அதிகளவான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.