சேனையூர் வருணகுல விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

-மூதூர் நிருபர்-

திருகோணமலையின் கிழக்கே மூதூரில் ஜவகை நிலம் சூழ அழகுடன் இயற்கை எழில் நிறைந்த செல்வ வளம் கொழிக்கும் செல்வந்த ஊராம் சேனையூர் திருப்பதியில் மூன்னூறு ஆண்டுகளாய் அற்புதங்கள் பல நிகழ்த்தி அருள் தந்து ஆட்சி செய்யும் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகப்பெருமானின் புண்ணிய திருத்தலத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை இடம் பெற்றது.

இதில் அதிகளவான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

கடந்த திங்கட்கிழமை , செவ்வாய்க்கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம் பெற்று, இன்று கும்பாபிசேகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.