சேனையூர் மத்திய கல்லூரியின் 67ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி

-மூதூர் நிருபர்-

தி/மூதூர் – சேனையூர் மத்திய கல்லூரியின் 67ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பழைய மாணவர்களின் நடைபவணி பேரணியானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

கல்லூரியின் அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பேரணியானது கல்லூரியின் நுழைவாயிலிருந்து ஆரம்பமாகி சேனையூர் பிரதேசத்தின் உள் வீதிகளில் பயணித்து மீண்டும் கல்லூரி நுழைவாயிலை வந்தடைந்து நிறைவு பெற்றது.

பேரணியில் தமிழர் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்வுகள் இடம்பெற்றதோடு வாகனங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அத்தோடு கல்லூரியின் முன்னாள் அதிபர்களின் திரு உருவப் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது சேனையூர் மத்திய கல்லூரியின் ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் தங்களது வகுப்புக்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில் மேலங்கிகளை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேரணியில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்