சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விடயமாக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு எதிர்பு தெரிவித்தமை  தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

குறித்த சம்பவத்தின் பொது கடந்த செவ்வாய்க்கிழமை சம்பூர் பொலிஸார் 10 பேரை கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்ற நீதிமன்றில் நேற்று புதன்கிழமை மதியம் 12.20 மணிக்கு முன்னிலையாகிய போது,  நீதிமன்றமானது கைது செய்யப்பட்டவர்களை சொந்தப் பிணையில் விடுவித்ததோடு, குறித்த பிரதேசத்தை இம் மாதம் 15 ம் திகதியன்று நீதிவான் பார்வையிடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

10 பேருக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன்,  ந.மோகன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்