செவ்வந்தியின் தாய் , சகோதரனுக்கு விளக்கமறியல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரனை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை தொடர்பான தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை மறைத்ததன் ஊடாக கொலைக்கு ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களைத் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்குக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்தநிலையில், சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.