இந்த பிரபஞ்சம் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது.
அப்படி உருவான இந்த பிரபஞ்சத்தில் நிகழும் முக்கிய விடயங்களில் ஒன்று தான் சூரியன் மற்றும் சந்திர கிரகணம்.
இது வானியல் ரீதியாகவும், ஜோதிடம் ரீதியாகவும் பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஜோதிடத்தில், கிரகணம் ஒரு அசுப நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனவே தான், கிரகண நேரத்தில் சுப காரியங்கள் செய்ய கூடாது என கூறப்படுகிறது.
இப்படி ஏற்படும் சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி நமக்கு பல்வேறு எண்ணங்கள் இருக்கும்.
சூரிய கிரகணம் என்பது என்ன?
சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேரடியாக வரும்போது ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும். அது சூரிய ஒளியை பூமியில் விழாமல் தடுக்கிறது. இதனால்இ கிரகண நேரத்தில் இருள் காணப்படுகிறது.
நாசாவின் விளக்கப்படி, சூரியனின் ஒளியை சந்திரன் முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரிய ஒளியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நிலவு மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
சந்திர கிரகணம் என்பது என்ன?
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது, சூரியனின் ஒளி சந்திரன் மீது விழாமல் பூமி தடுப்பதைத் தான் சந்திர கிரகணம் என்கிறோம்.
முழு சந்திர கிரகணம் நிகழும்போது, முழு சந்திரனும் பூமியின் நிழலில் மூழ்கும். பூமி பாதி நிலவை மட்டும் மறைக்கும் போது சிவப்பு நிறமாக மாறும். இதை ‘இரத்த நிலா’ கிரகணம் என்று குறிப்பிடப்படுகின்றன.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால், தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள் உங்கள் விழித்திரையை சேதப்படுத்தும்.
ஆனால், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்