
சூரியனை நோக்கி விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ஆதித்யா எல்-1
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலனான சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல்1 என்ற விண்கலம் இன்று சனிக்கிழமை முற்பகல் 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ரொக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ரொக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்த உள்ளது.
100-120 நாட்கள் பயணித்து எல் 1 சுற்று வட்டப்பாதையை அடைந்து, சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் ,சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது.
இந்த விண்கலம், சுமார் 400 கிலோ எடை கொண்டதுடன் விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும். ஆதித்யா எல்-1-ன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதுவரை இடைவிடாமல் ஆய்வு பணியை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
