சுவிட்சர்லாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சுற்றுலாப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சூஸ்(Susch) மற்றும் செர்னெஸ்(Zernez) நகரங்களுக்கு இடையிலான மலைச் சாலையில் சென்ற பேருந்து பாதுகாப்புத் தடுப்பில் மோதி, சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. பேருந்தில் 48 டச்சு பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.











